கார் விபத்து – மகாவலியில் சம்பவம் UPDATE

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கண்டி – இலுக்மோதர பகுதியில் மகாவலி ஆற்றுக்குள் பாய்ந்த கார் இன்று (28/11) மாலை மீட்கப்பட்டுள்ளது .இதில் காணாமல் போயிருந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிந்திய செய்தி

கண்டி – குருதெனிய வீதியில் நேற்று (27/11) இரவு பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று இலுக்மோதர பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மகாவலி கங்கைக்குள் பாய்ந்துள்ளது.

விபத்தில் ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரின்வேகம் காரணமாக காணாமல் போன நபர் காருடன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கார் விபத்து - மகாவலியில் சம்பவம் UPDATE

Social Share

Leave a Reply