யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழ்ப்பணம் – வல்வெட்டிதுறையில் நேற்று (27/11) மாலை மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில் பிரசன்னமாகி இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யட்டிருந்த தடையுத்தரவு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பெருமளவிலான பொதுமக்கள் ஒன்றுகூடி மாவீரர் தின நிகழ்வுகளை விமர்சையாக முன்னெடுத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மாவீரருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட சகல பொது மக்களும் தீபச்சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம் மட்டுமன்றி வவுனியா முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர் வசிக்கும் பல பிரதேசங்களிலும் நேற்றைய தினம் மாவீரர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்
யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version