LPL – தடுமாறி மீண்டு, சிறந்த இலக்கை பெற்றது காலி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் மார்வலஸ் அணிகளுகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமாதச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

துடுப்பாட்டத்தை ஆரம்பித்த காலி அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தடுமாறியது. ஜேசன் பெஹ்ரன்ட்டொப் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லவை 05(08) ஓட்டங்களுடனும், அலெக்ஸ் ஹேல்ஸ் 06(09) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க செய்தார். ஏழாவது ஓவரில் 24 ஓட்டங்களை பெற்ற வேளையில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஜனித் லியனகே 07(08) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக்க ராஜபக்ஷ நிதானமாக ஆரம்பித்து அதிரடி நிகழ்த்தி காலி அணியை மீட்டு எடுத்தார். ரிம் செய்பெர்ட்டும் அவருக்கு கைகொடுத்த்து இணைப்பாட்டம் ஒன்றை வழங்கினார். இருவரும் 62 ஓட்டங்களை பகிர்ந்தனர். செய்பேர்ட் 47(37) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பானுக்கவுடன் ஜோடி சேர்ந்தார் ஷகான் ஆராச்சிகே. 72 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட செஹான் ஆராச்சிகே 16(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பானுக ராஜபக்ஷ 82(33) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். டுவைன் பிரட்ரோரியஸ் 12(10) ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் முதல் 10 ஓவர்களில் 48 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டன. 20 ஓவர்கள் நிறைவில் காலி அணி 06 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

யாழ் அணியின் பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரன்ட்ஒப் 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். அசித்த பெர்னாண்டோ 4 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். அஹ்மதுல்லா ஒமர்ஷாய் 03 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்களை கைப்பற்றினார். வியாஸ்காந்த் 3 ஓவர்களில் 39 ஓட்டங்களை வழங்கினார்.

இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன.

இரு அணிகளும் மாற்றங்களின்றி விளையாடுகின்றன.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் அல்லென், தனஞ்சய டி சில்வா, அஸ்மதுல்லா ஒமர்ஷாய், விஜயகாந்த் வியாஸ்காந்த், ஜேசன் பெஹ்ரன்டோப்

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான,கவிந்து நதீஷான்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version