20% அதிகமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை – ஆய்வில் வெளிக்கொணர்வு 

இலங்கை சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையிலுள்ள 16.1% வீதமான மக்களுக்கள் பாதுகாப்பற்ற கிணறுகளினுடாகவே குடிநீரைப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்களும், கிராமப்புறங்களிலுள்ள மக்களில் நான்கில் ஒரு பகுதியினரும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துகின்றனர். 

இருப்பினும், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களில் 3.1% மாத்திரம் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் சனத்தொகையில் 6.3% அடிப்படை சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்வதில்லை எனவும், 0.1% வீதமான மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version