கொழும்பு இந்துக் கல்லூரிக்கு இன்னிங்ஸ் தோல்வி 

கொழும்பு இந்துக் கல்லூரி B அணி எதிர் ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணிகளுக்கு இடையில் இன்று(23.07) நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட Division 3 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி B அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணி சார்பில் பந்துவீச்சில், எஸ். நிம்சுர 3 விக்கெட்டுக்களையும், எம். திவ்யாஞ்சன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்னிங்ஸை இடை நிறுத்திக் கொண்டது. ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணி சார்பில் எஸ். மதீஷ 53(59) ஓட்டங்களையும், எ. சங்கல்ப 40(92 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

கொழும்பு இந்துக் கல்லூரி B அணி சார்பில் பந்து வீச்சில் ஆர். அம்ஷன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

85 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி B அணி 56 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 29 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.  

ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணி சார்பில் பந்து வீச்சில் எ. சங்கபால, ஆர். விவன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் ஸ்ரீ இராஜசிங்க மத்திய கல்லூரி A அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது. 

கொழும்பு இந்துக் கல்லூரிக்கு இன்னிங்ஸ் தோல்வி 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version