மகளிர் ஆசிய கிண்ணத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில்

மகளிர் ஆசிய கிண்ணத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதியில்

இலங்கை, தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்தியா மகளிர் அணி அபார வெற்றியை பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இன்றைய முதற் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஷபாலி வர்மா 81 ஓட்டங்களையும், தயாளன் ஹேமலதா 47 ஓட்டங்களையும், ஜெமிமா ரொட்ரிகஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிட்டா ரணா மகர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிந்து ரவால் 17 ஓட்டங்களையும், சிட்டா ரணா மகர் 18 ஓட்டங்களையும், இந்து பர்மா 14 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்களையும், அருந்ததி ரெட்டி 2 விக்கெட்களையும், , ராதா யாதவ் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

குழு A அணிகள் தமது போட்டிகளை நிறைவு செய்துள்ளன. அதன்படி இந்தியா அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது. நேபாளம் அணி ஒரு வெற்றியோடு மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது. ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றிகளைப் பெறவில்லை.

நாளைய தினம் குழு B இன் இறுதிக் கட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டி முடிவுகளின் படி அரை இறுதி போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version