கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று(23.07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடைத்தாள் மதிப்பீட்டிற்கான அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.