அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட சமூக ஆலோசனை குழுக்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுத்து
உயர் நீதிமன்றம் இன்று (24.07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தமது நடவடிக்கைகளை
மேம்படுத்திக் கொள்வதற்காக அரச சொத்துக்களை பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு அரச நிறுவனங்கள் மற்
றும் அதன் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
அந்த கடிதத்திற்கமைய நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிடுமாறு கோரி,
தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.