20-20 அணியில் மத்திஸுக்கு இடமில்லை. சமீரவுக்கு மீண்டும் காயம்

அடுத்த உலகக்கிண்ண தொடரை குறிவைத்தே அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படுமெனவும், அதன் காரணமாகவே குஷல் பெரேரா மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோர் அணியில் தெரிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் அஞ்சலோ மத்தியூஸ் 20-20 உலகக்கிண்ண தொடருக்கு சேர்த்துகொள்வது தொடர்பில் கணக்கிலெடுக்கப்பாடாது எனவும் உறுதி செய்துள்ளார்.

சரித் அசலங்க நீண்ட நாட்களுக்கு அணியின் தலைவராக தொடர்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும்,அடுத்த 20-20 உலகக்கிண்ணம் வரை அவரை கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் உப்புல் தரங்க இன்று(24.07) ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

LPL தொடரில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட சமிந்து விக்மரசிங்க போன்ற இளவயது வீரர்களை வளர்த்து எடுக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் அவரை அணியில் சேர்த்துள்ளதாகவும் கூறிய உப்புல் தரங்க, கண்டி ஆடுகளத்துக்கு ஏற்ப தஸூன் சாணக்கவின் பந்துவீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் கூறினார். இது தொடர்பில் எமது வி மீடியாவின் ஊடகவியலாளர் தேஜானி விக்ரமசிங்க உப்புல் தரங்கவிடம் கேட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதில் கீழுள்ளது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இடைக்கால பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரியவிடம் இலங்கை வீரர்களது ஒழுக்கம் தொடர்பில் வினவப்பட்ட போது ” தான் இடைக்கால பயிற்றுவிப்பாளர் எனவும், தான் இருக்கும் இரண்டு மாத காலப்பகுதியில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதாகவும், அதற்குரிய நடவடிக்கைள் எடுப்பேன்” எனவும் கூறியுள்ளார். அத்தோடு ராஜஸ்தான் ரோயல்ஸ் அக்கடமியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஸுபின் பாருச்சா துடுப்பாட்ட வீரர்களுக்கும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவிட் பந்துவீச்சாளர்களுக்கு 7 நாட்கள் பயிற்றுவிப்புகளை வழங்கியுள்ளார்கள். இவ்வாறன பயிற்சிகளை தொடர் ஒன்றுக்கு முன்னதாக நடத்தியிருப்பது இதுவே முதற் தடவை எனவும் இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version