கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு ஜனாதிபதியே காரணம் – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விகரமசிங்கவிடம் கோரியதாகவும்.
இதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்த நாமல் ராஜபக்ச அப்போது பெரமுன ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் கூறினார்.

அவரது கொள்கைளை கட்சியின் கொள்கைகளுக்கேற்ப பொருத்தமற்றதாக காணப்படுகின்ற போதிலும் ஜனாதிபதியியால் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகள் தொடர்பில் எந்தவொரு கருத்தையும் தமது கட்சி வெளிப்படுத்தியதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம் எனவும் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தீர்மானங்களை எடுப்போம் எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version