இலங்கை-இந்தியா இரண்டாம் போட்டி ஆரம்பம்

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி இன்று(28.07) கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பமாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்குமான போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றிருந்தது.

அணி விபரம்

அணி விபரம்
இந்தியா அணி சார்பாக கழுத்து உபாதை காரணமாக சுப்மன் கில் நீக்கப்பட்டு சஞ்சு சம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுசங்க நீக்கப்பட்டு, ரமேஷ் மென்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா

சூர்யகுமார் யாதவ், சஞ்சு சம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ், ரிங்கு சிங், ரியான் பராக்

இலங்கை

பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குஷல் ஜனித் பெரேரா, சரித் அஸலங்க தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ, ரமேஷ் மென்டிஸ், கமிந்து மென்டிஸ்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version