மூடப்படும் நிலையிலிருந்த வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயம், அதிபரின் பெரும் முயற்சியினால், முன்னேற்றம் அடைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு 500000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் போட் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
மூன்று வருடத்திற்கு முன் இப்பாடசாலைக்கு சென்ற பொழுது மூன்று பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். இன்று பத்து பிள்ளைகள், வரும் காலத்தில் இன்னும் அதிகமாக பிள்ளைகள் இணைக்கப்படுவார்கள். இங்குள்ள முன் பள்ளியும் சிறந்த முறையில் இயங்குகின்றது. இதற்காக பாடசாலை சார்ந்த சமூகத்தினருக்கு நன்றி கூறினோம்.
பத்து பிள்ளைகள் இருக்கும் பாடசாலைக்கு ஸ்மார்ட் போட் ஏன் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்?
இப்பாடசாலை ஒரு காலத்தில் மகாவித்தியாலயம், பல நூற்றுக்கணக்கான பிள்ளைகள் கல்வி பயின்ற பாடசாலை. பழைய நிலைக்கு இப்பாடசாலை வரவேண்டும் என்கிற நோக்கத்துடன் எமது பங்களிப்பாக, இதனை வழங்கினோம். இன்னும் எமது பங்களிப்பு தொடரும்.
இதற்காக, அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பெரும் முயற்சி எடுத்தனர்” என்றார்.