உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும், கேக் உள்ளிட்ட பேக்கரிகளுக்கு தேவையான முட்டைகளை வழங்கவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.