இலங்கை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா அணியுடன் விளையாடவுள்ள இலங்கை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, கமிந்து மென்டிஸ், ஜனித் லியனகே, நிஷான் மதுஷ்க, வனிந்து ஹசரங்க, டுனித் வெல்லாளஹே, சாமிக்க கருணாரட்ன, மஹீஸ் தீக்ஷண, அகில தனஞ்சய, டில்ஷான் மதுசங்க, மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 02,04 மற்றும் 07 ஆம் திகதிகளில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.