எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடமை தமக்கு உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.