ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 3,690 ரூபாவுக்கும், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 1,482 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 694 ரூபாவுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.