மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்  

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்  

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியாகியுள்ளது.

மின் விநியோகம், பெற்றோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானியின் படி, எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி மன்றம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளை மூலம் வழங்கப்படும் சேவைகள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய சேவைகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version