அயர்லாந்துக்கு பயணமானது இலங்கை மகளிர் அணி

அயர்லாந்துக்கு பயணமானது இலங்கை மகளிர் அணி
அயர்லாந்துக்கு பயணமானது இலங்கை மகளிர் அணி. SrLanka women’s team tour of Ireland

ஆசிய கிண்ணத்தை வென்ற பலத்துடன் இலங்கை மகளிர் அணி அயர்லாந்துக்கு இன்று(06.08) பயணமானது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நடைபெற்ற மும்மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் இலங்கை மகளிர் அணி விமான நிலையம் நோக்கி பயணமானது.

இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து 20-20 தொடரில் பங்கேற்க மாட்டார் எனவும் அனுஸ்கா சஞ்சீவினி 20-20 தொடருக்கு தலைமை தங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கு சாமரி தலைமை தங்கவுள்ளார்.

இம்மாதம் 11 மற்றும் 13 ஆம் திகதிகளில் 20-20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 16,18 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version