
கொழும்பு இந்துக் கல்லூரி 17 வயதுக்குட்பட்ட அணி Division 3 கிரிக்கெட் போட்டித் தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. 5 போட்டிகளில் பங்கேற்று 3 போட்டிகளில் 3 மேலதிக புள்ளிகளைப் பெற்றுள்ள கொழும்பு இந்துக் கல்லூரி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
எசியன் கிராமர் சர்வதேச பாடசாலைக்கு(Asian Grammar International School) எதிராக இன்று(07.08) நடைபெற்ற போட்டியிலும் கொழும்பு இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டியது.
தெஹிவளையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற எசியன் கிராமர் சர்வதேச பாடசாலை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, எசியன் கிராமர் சர்வதேச பாடசாலை 24.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்துக் கல்லூரி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷா 4 விக்கெட்டுக்களையும், சத்யா சபிஷன் 3 விக்கெட்டுக்களையும், ராமநாதன் தேஷகர் 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி, 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. அணி சார்பில் தவகுமார் சந்தோஷ் 33(26) ஓட்டங்களையும், ரஞ்சித் அகிலேஷ் 30(18) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, கொழுமம்பு இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட Division 3 தொடரில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.