நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்

வரலாற்று புகழ்பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (09.08) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர்.

இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

மேலும் 18 ஆம் திகதி மஞ்சமும் 31 ஆம் திகதி சப்பரமும் அடுத்த மாதம் முதலாம் திகதி தேர்த் திருவிழாவும் 02 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

தொடர்ந்தும் 03 ஆம் திகதி பூங்காவனமும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வைரவர் உற்சவத்துடனும்
மஹோற்சவம் நிறைவுக்கு வரும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version