இலங்கை மகளிர் அணியில் விது பாலாவின் பங்கு

இலங்கை மகளிர் அணியில் விது பாலாவின் பங்கு

இலங்கை மகளிர் அணி ஆசியக்கிண்ணத்தை வென்றதன் பின்னர் அந்த அணியின் மீது பார்வை அதிகம் திரும்பியுள்ளது. ஆனாலும் இந்த தொடருக்கு முன்னதாக தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறந்த பெறு பேற்றை பெற்றுக்கொண்டது. வீராங்கனைகள் இந்த போட்டிகளில் வெற்றி பெற முக்கியமான காரணமென்றால் துணை உத்தியோகஸ்தர்கள் என அழைக்கப்படும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய ஏனைய ஊழியர்கள். அவர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவ்வாறானவர்களில் இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் முன்னாள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரமேஷ் ரத்நாயக்க முக்கியமானவர். அதேபோன்று துடுப்பட்ட பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பாளர், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவ்வாறானவர்களில் புள்ளி விபரவியல் மற்றும் ஆய்வுகளை செய்து வழங்கும் விது பாலா இன்னுமொரு முக்கியமானவர். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து சென்ட். பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர். பின்னர் யாழ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார். திருமணத்தின் பின்னர் தற்போது இவர் கண்டியில் வசித்து வருகின்றார். அயர்லாந்து பயணத்துக்கு முன்னர் நெற்றியில் திருநீற்றுடன் தமிழ் மணத்தோடு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு வந்தவரை பார்த்து கைகொடுத்து கதைக்காமல் இருக்கமுடியவில்லை. இலங்கை தேசிய அணிக்குள் விளையாடுவது மட்டுமல்ல இவ்வாறன பதவிகள், பொறுப்புகளுக்கு வருவதும் சாதனையே. அதனையும் நாம் கொண்டாட வேண்டும். ஆசியக் கிண்ணத்தை வென்ற வீராங்கனைகள் இவரையும் பாராட்டி நன்றியை வெளிப்படுத்தியதை பார்க்கக் கூடியதாக அமைந்தது. களத்தில் நின்று போராடுவார்கள் முக்கியமாவனர்கள். அதேபோல திரை மறைவில் இருந்து செயற்படும் சகலரும் முக்கியாமானவர்களே.

விதுபாலா இலங்கை அணியோடு பயணித்து மேலும் பல உயரங்களை தொடர் எமது வாழ்த்துக்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version