ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கபப்ட்ட முன்னாள் அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்த நிலையில் அவர்களது பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மனுஷ நாணயக்காராவின் இடத்துக்கு காலி மாவட்டத்தில் அவருக்கு அடுத்த இடத்தை பெற்றுக்கொண்ட பந்துல பண்டாரிகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கட்சி உயர்பீடம் கூடி முடிவெடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்குக்கு பாரளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படலாமென கட்சி வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

பதவி இழந்த இரு அமைச்சர்களது இடங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அரச தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version