இன்றைய வாநிலை..!

இன்றைய வாநிலை..!

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை வீழ்ச்சி பதிவாக்கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version