வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு  

வாக்குகளுக்காக இலஞ்சம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு  

வாக்குகளை பெறுவதற்காக அரசியல் பிரதிநிதிகள் சிலர் மக்களுக்கு இலஞ்சம் வழங்குவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவற்றுள் பெரும்பாலான முறைப்பாடுகள், அதிகாரம் மற்றும் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி நிலவும் இந்தக் காலகட்டத்திலும் பிளாஸ்டிக் கதிரைகள், கோழிக்குஞ்சுகள், பாடசாலை உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 44 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் இலஞ்சமாக பல்வேறு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version