சர்வஜன சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் இன்று(13.08) தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
திலித் ஜயவீர சார்பில் கலாநிதி ஜீ.வீரசிங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.