கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 29 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேர்தல் சட்டம் மீறல் தொடர்பான 26 முறைப்பாடுகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளளை கடந்த மாதம் முதல் நேற்று வரை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 355 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை தேர்தல் சட்ட மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.