பொதுஜன ஐக்கிய முன்னணி உதயம்

பொதுஜன ஐக்கிய முன்னணி உதயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பல கட்சிகளுடன் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி
என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த கூட்டணியை அமைத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய புதிய கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற
உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்,
மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

எதிர்வரும் தேர்தலில் இந்த புதிய கூட்டணி கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version