
சீகிரியா சிங்கபாதம் அருகில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதைத்
தொடர்ந்து சீகிரியாவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கான 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் இன்று (14.08) பிற்பகல் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகரித்த வெப்பம் மற்றும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகையே
குளவிகள் கலைவதற்கு காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மத்திய கலாசார நிதியத்தின் சீகிரிய திட்ட முகாமையாளர் துசித ஹேரத்,
குளவிகள் தாக்குதலின் போது சீகிரியாவை பார்வையிடுவதற்கு பயணச் சீட்டுகளை பெற்று உள்ளே செல்ல முடியாதவர்களின்
பணத்தை மீள வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் சீகிரியாவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.