முக்கிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்

முக்கிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களுக்கமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இதற்கு முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தனர். இருவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டப்பூர்வமானது என உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பினை வழங்கிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றும் தகுதியிழந்தனர்.  

இதன் காரணமாக வெற்றிடமாகிய அமைச்சுப் பதவிகள் தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version