
கம்பஹா, திவுலப்பிட்டி – நீர்கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
திவுலபிட்டிய துனகஹா நகரில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.