குளவிகொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெர்கஸ்வேல்ட் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் 10 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருந்த எட்டு பேர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version