பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவானல், அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
வெற்றி பெறுவதற்கு முன்னரே கட்சிக்குள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய உதயங்க வீரதுங்க, தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பின்தள்ளும் முயற்சிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புதிய ஆய்வுகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முன்னிலையில் இருப்பதாகவும் உதயங்க வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.