வவுனியாவில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் இன்று (16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகன் காணாமற் போயிருந்த நிலையில் அவரது தந்தை தேடியுள்ளார்.
இதன்போது காணியின் பின்புறத்தில் இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.