இ.தொ.கா வின் ஆதரவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இ.தொ.கா வின் ஆதரவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தலில் தமது ஆதரவு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று (18.08) கூடியது.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது இ.தொ.கா தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை விடுத்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version