ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஹரின் மற்றும் மனுஷ

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஹரின் மற்றும் மனுஷ

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடன் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. .

விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரீன் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 41(1) பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரையும் கட்சியில் இருந்து நீக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியாக செல்லுபடியாகும் என உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version