இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா எனப்படும் பகுதியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
பாரமுல்லா பிரதேசத்தில் இன்று(20.08) காலை 6.45 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் முதலாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஏழு நிமிட இடைவெளியில் 4.8 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து, வீதிகளை நோக்கி ஓடி வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் தொடர்பில் அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை.