ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் மாதம் 5ம் மற்றும் 6ம் திகதிகள் வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.