
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆவார்.
இவர் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார், இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி தமிழில் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படத்தில் நடிக்கும் போது இவரது மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக இருந்தது என்று கூறியதற்காக அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு மூக்கை மெல்லியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்றிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடிகை ஜான்வி கபூரும் தன்னுடைய மூக்கை மாற்றிகொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.
தன்னுடைய அம்மா மற்றும் அக்காவை தொடர்ந்து நடிகை குஷி கபூர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அழகை மேம்படுத்த மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளார்.