
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பில் இன்று இந்த கலந்துரையாடல் (20) இடம்பெற்றது.
புதிய கூட்டணியின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய கூட்டணிக்கு நிர்வாகிகள், நிர்வாக சபை மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகளை ஈடுபடுத்துவது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறும் எந்தவொரு தேர்தலுக்கும் இந்த புதிய அரசியல் கட்சியின் மூலம் வேட்பாளர்களை முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதிய அரசியல் கட்சிக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கான யாப்பு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் அந்த யாப்பின் பிரகாரம் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.