இலங்கையில் மதுபானங்களின் பாவனை 70% குறைவடைந்துள்ளமையினால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு மற்றும் எதனோல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் மதுபான பாவனை இவ்வாறு குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக பொது மக்களிடையே சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு நுகரப்படும் மதுபானங்களின் தரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு அதிகமாக நுகரப்படும் மதுபானங்களின் விலையை குறைப்பதற்கான கோரிக்கை நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.