பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் இன்று (21.08) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடிவேல் சுரேஷ் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது, வடிவேல் சுரேஷ் ஆதரவாக வாக்களித்ததால் பசறை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமான நாாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அலி சாஹிர் மௌலானா கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.