தியத்தலாவை – தொடாம்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று (30/11) எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் உயிர் ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என தியத்தலாவை பொலிஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், “பல பகுதிகளிலும் எரிவாயு அடுப்பு வெடிப்புக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்படுவதால் நாங்கள் இன்று காலை விறகு அடுப்பிலேயே உணவு சமைத்தோம்.
காலை 6.30 மணியவில் தங்கைகள் இருவரையும் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்காக அம்மா வெளியில் சென்றுவிட்டாா். நான் அறையில் இருந்தேன். சமையலறையிலிருந்து பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டது.
படுக்கை விரிப்பை கொண்டு சிலிண்டரை மூடி ரெகியுலேற்றரை அகற்றிவிட்டு சிலிண்டரை வெளியில் வீசிவிட்டேன். ஆனால், அடுப்பு முழுமையாகச் சேதமடைந்திருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.