மகளிர் T20 உலகக்கிண்ண போட்டி அட்டவணை வெளியானது

மகளிர் T20 உலகக்கிண்ண தொடருக்கான மாற்றியமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒக்டொபர் 03 ஆம் திகதி ஷார்ஜாவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியோடு தொடர் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் பாகிஸ்தான் அணியோடு இலங்கை அணி இரண்டாவது போட்டியில் மோதவுள்ளது.

04 ஆம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி முதலாவது போட்டியாகவும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாவது போட்டியாகவும் டுபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

05 ஆம் திகதி ஷார்ஜாவில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதற் போட்டி நடைபெறவுள்ளது. அதே மைதானத்தில் இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.

06 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் முதற் போட்டியாகவும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாம் போட்டியாகவும் நடைபெறவுள்ளது.

07 ஆம் திகதி தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி 08 ஆம் திகதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

09 ஆம் திகதி தென்னாபிரிக்கா, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும், இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியும் டுபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 10 ஆம் திகதி ஷார்ஜா மைதானத்தில் பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

11 ஆம் திகதி அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் நடைபெறவுள்ளது. 12 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி ஷார்ஜாவில் முதற் போட்டியாகவும், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டி இரண்டாம் போட்டியாகவும் டுபாய் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

13 ஆம் திகதி இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியும், இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. 14 ஆம் திகதி பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் நடைபெறவுள்ளது. 15 ஆம் திகதி இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியும் டுபாயில் நடைபெறவுள்ளது.

17 ஆம் திகதி முதலாவது அரை இறுதிப் போட்டி டுபாயிலும், 18 ஆம் திகதி இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குழு A இல் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும், குழு B இல் பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளடங்கியுள்ளன.

இரு போட்டிகள் நடைபெறும் தினங்களில் பிற்பகல் 3.30 இற்கும், மாலை 7.30 இற்கும் போட்டிகள் நாடைபெறவுள்ளன. ஒரு போட்டி நடைபெறும் தினங்களில் மாலை 7.30 இற்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version