தேர்தலின் போது ஊடகங்களை கண்காணிக்க விசேட அமைப்பு 

தேர்தலின் போது ஊடகங்களை கண்காணிக்க விசேட அமைப்பு 

தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 

இந்நிலையில், தேர்தலின் போது அனைத்து ஊடக நடத்தைகளையும் அவதானித்து, அதனைப் பரிசீலனை செய்வதினூடாக ஊடகங்களின் நெறிமுறையற்ற நடத்தைகள் தொடர்பில் தேர்தல் ஆணையத்திற்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு ‘தேர்தல் ஊடக கண்காணிப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு’ (EMMVA) எனும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினூடாக தேர்தல் நிறைவடையும் வரை ஊடகங்களின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படவுள்ளன. 

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் என அனைத்து விதமான ஊடகங்களும் கண்காணிக்கப்படவுள்ளதாக ‘தேர்தல் ஊடக கண்காணிப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு’ அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பில் முன்னணி ஊடக வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உள்ளிட்ட நபர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version