மக்களின் நோக்கமும் ஆட்சியாளர்களின் நோக்கமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் அமைக்கப்படும்
என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடு அனுரவிற்கு எனும் தொனிப்பொருளில் மாலம்பேயில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில்
அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கமைய அமைக்கப்படும் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என தெரிவித்த அனுர
நாட்டு மக்கள் பல வருடங்களாக தேர்தலுக்காக காத்திருப்பதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதாக கூறி ஒன்றரை வருடங்களாகின்ற போதிலும்
நடத்தப்படவில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமலிருக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும் அது தோல்வியுற்றதாக தேசிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறினார்.
வாக்களிக்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் திசைகாட்டி வெற்றி பெற பாடுபடுவோம் எனவும் தாம் திட்டமிட்டு செய்த பணியை விட மக்கள் தம்மை வெற்றிப்பெறச் செய்வதற்கு அதிக வேலை செய்து கொண்டிருப்பதை காணமுடிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.