தேர்தலில் போட்டியிட ரணில் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேர்தலில் போட்டியிட ரணில் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்ற கட்டணமாக 50,000 ரூபா செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவிடப்டப்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு பொய்யாக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த மனு அரசியலமைப்பின் 92வது சரத்தை மீறுவதாகவும் உள்ளதால் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இதன் போது ஆட்சேபனை தெரிவித்தார்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version