ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதில் நாட்டிற்கு தேவையான பல முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் நடைமுறைக்கு சாத்தியமானதும் தற்காலத்திற்கு தேவையானதாகவும் அமையும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம்
யதாரத்தமற்றதும் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவும் உள்ளதென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள விடயங்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவை முரண்ட்டதாகவும் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி சிறந்த விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.