குளவி கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்

மாத்தறை, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுமார் 100 மாணவர்கள் உட்பட 2 கல்விசாரா ஊழியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகிய சம்பவம் இன்று(30.08) பிற்பகல் பதிவாகியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய அனைத்து மாணவர்களும் ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 8 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

70 மாணவர்கள் தற்போது ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்திலிருந்த குளவிகளே மாணவர்களை இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version