இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று(31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இம்மாதமும் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, 344 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 332 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
379 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 337 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீட்டரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 307 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
355 ரூபாவாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் லீட்டரின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 352 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.