ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 25 பேருக்கு திடீர் சுகவீனம்

ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் 25 பேருக்கு திடீர் சுகவீனம்

மஹியங்கனை, கெமுனுபுர பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ஊழியர்கள் 25 பேருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் தொழிற்சாலையில் நேற்று(30.08) இரவு பணிபுரிந்து கொண்டிருந்த போதே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் சந்தேகம் வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version